கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 20 டாலராகக் குறையும்: கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு

கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 20 டாலராகக் குறையும்: கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பு
Updated on
1 min read

இப்போதைய நிலைமை நீடிக்கும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 20 டாலர் என்ற அளவுக் குக் குறையும் என்று கோல்ட்மென் சாக்ஸ் நிறுவன நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் இதனால் எண்ணெய் உற்பத்தி செய் யும் நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் எண்ணெய் வயல் களில் பெரும்பாலோர் வேலையிழக் கும் அபாயம் உருவாகும் என தெரிகிறது. அத்துடன் அரசுக்கு வரும் வருமானமும் குறையும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பீப்பாய் 107 டாலர் விலையில் விற்பனையானது. இப்போது ஒரு பீப்பாய் 44 டாலராகக் குறைந்துள்ளது. இது ஒரு பீப்பாய் 20 டாலர் என்ற அளவுக்குக் குறையும் என சுட்டிக் காட்டியுள்ளது. 2002-ம் ஆண்டில் ஒரு பீப்பாய் விலை 20 டாலர் என விற்றதையும் கோல்ட்மேன் சாக்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

சந்தையின் தேவைக்கு அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதே விலை சரிவுக்குக் காரணமாகும். மேலும் 2016-ம் ஆண்டில் இது மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய் 20 டாலர் என்ற விலைக்கு சரியும் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஷேல் எண் ணெய் வயல் மற்றும் இராக்கில் எதிர்பார்ப்புக்கும் அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யப் பட்டதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவை ஓரங்கட்ட வேண் டும் என்பதற்காக வளைகுடா நாடு கள் உற்பத்தியைக் குறைக்க வில்லை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்று கோல்ட் மேன் சாக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in