சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 56 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 56 விமான சேவைகள் ரத்து
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில், 56 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நேற்று 12-வது நாளாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

நேற்று அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரையில் சென்னையில் இருந்து புறப்படும் 28 விமானங்கள், வரும் 28 விமானங்கள் என, மொத்தம் 56 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இவை அனைத்தும் கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, புனே, பாட்னா, டெல்லி, மும்பை, அகமதாபாத், புவனேஸ்வர், பெங்களூர், திருவனந்தபுரம் கோவை, துபாய், இந்தோனேசியா புறப்பாடு மற்றும் வருகை விமானங்களாகும். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 56 விமான சேவைகள் ரத்து
Akhanda 2: Thaandavam விமர்சனம் - பாலையாவின் மாஸ் மசாலா திருப்தியா, விரக்தியா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in