Published : 30 Sep 2015 10:24 AM
Last Updated : 30 Sep 2015 10:24 AM

பேடிஎம் நிறுவனத்தில் அலிபாபா முதலீடு

பேடிஎம் நிறுவனத்தில் (பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்) அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஆன்ட் பைனான்ஸியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிறது. இருந்தாலும் எவ்வளவு என்ற விவரம் முதலீடு செய்யப்பட் டுள்ளது வெளியிடப்படவில்லை.

இந்த வருட ஆரம்பத்தில் ஒன் 97 நிறுவனத்தில் ஆன்ட் பைனான்ஸியல் சர்வீசஸ் முதலீடு செய்தது. இப்போது கிடைத் திருக்கும் முதலீடு விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல பேடிஎம் நிறுவ னத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அலி பாபா தெரிவித்துள்ளது.

இ-காமர்ஸ் துறையில் இந்தியா முக்கியமானது. பேடிஎம் நிறுவனத்துடன் இணை வதன் மூலம் புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும் என அலிபாபா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியல் சாங் தெரி வித்தார்.

அலிபாபா ஏற்கெனவே ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது. இந்திய இ-காமர்ஸ் நிறுவனங் களில் முதலீடு செய்வதை அலிபாபா அதிகரித்து வருகிறது.

இந்த இணைப்புக்கு சிட்டி நிறுவனம் நிதி ஆலோசகராக பேடிஎம் நிறுவனத்துக்கு இருந் துள்ளது. முன்னதாக பேடிஎம் நிறுவனம் பேமெண்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x