Published : 31 May 2014 11:00 AM
Last Updated : 31 May 2014 11:00 AM

அமிதாப் சௌத்ரி - இவரைத் தெரியுமா?

$ ஹெச்டிஎப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. இங்கிலாந்தின் ஸ்டாண்டர்ட் லைஃப் பிஎல்சி நிறுவனத்தின் கூட்டுடன் செயல்படும் இந்நிறுவனத்தின் தலைவராக 2010 முதல் உள்ளார்.

$ 1987-ம் ஆண்டு பாங்க் ஆப் அமெரிக்காவில் தனது பணியைத் தொடங்கினார்.

$ 2001-ம் ஆண்டு கிரெடிட் லியோனாய்ஸ் செக்யூரிடீஸ் நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கு தலைமையேற்றார்.

$ 2003-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் பிபிஓ பிரிவுக்கு தலைவராக பொறுப்பேற்றார்.

$ 1985-ல் பிலானியில் உள்ள பிர்லா அறிவியல் தொழில்நுட்ப கல்வி மையத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.

$ ஆமதாபாதில் உள்ள ஐஐஎம் மையத்தில் 1987-ல் நிர்வாகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

$ மணிபால் சர்வதேச கல்விச் சேவை நிறுவன இயக்குநர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். ராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x