Published : 11 Jun 2020 06:46 AM
Last Updated : 11 Jun 2020 06:46 AM

ஊரடங்கால் பார்லே-ஜி பிஸ்கெட் சாதனை

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பார்லே-ஜி பிஸ்கெட் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராண்டட் பிஸ்கெட் சந்தையில் பார்லே-ஜி பிராண்டின் சந்தைமதிப்பு 5 சதவீதம். கரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பிஸ்கெட் விற்பனை வெகுவாக அதிகரித்ததால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி மயங்க் ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்தின் குறைந்த விலை பிஸ்கெட் பாக்கெட் ரூ.2 ஆகும். இதில் குளுக்கோஸ் சத்துஇருப்பதால் ஊரடங்கு காலத்தில் இது மிகச் சிறந்த மாற்று உணவாக பலருக்கும் இருந்துள்ளது.

ஊரடங்கு காலத்தில் மட்டும் நிறுவனத்தின் விற்பனை சந்தை 4.5 சதவீதம் முதல் 5 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இரண்டுமாதங்களில் சந்தை அளவு அதிகரித்தது இது சாதனை அளவாகும் என்று ஷா குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இதுபோன்ற வளர்ச்சியை எட்டியதில்லை என்றார்.

இதற்கு முன்பு நிகழ்ந்த பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் கூட இந்த அளவுக்கு விற்பனை அதிகரித்ததில்லை. பிராண்டின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை இதற்கு சிறந்த உதாரணம் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x