Published : 10 Jun 2020 10:14 PM
Last Updated : 10 Jun 2020 10:14 PM

அஸ்ஸாமில் எரிவாயு கிணறு தீ பிடித்து எரிவது ஏன்?- ஆயில் இந்தியா நிறுவனம் விளக்கம்

அஸ்ஸாமில் தீன்சசுக்கியா மாவட்டத்தில் பக்ஜானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு கிணறு வெடி விபத்து பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயில் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அஸ்ஸாமில் தீன்சுக்கியா மாவட்டத்தில் உள்ள பக்ஜான் எண்ணெய் வயலின் கீழ் உள்ள வாயு உற்பத்தி கிணறு பக்ஜான்- 5, பணி மாற்று இயக்க வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது 27 மே 2020 அன்று திடீரென்று செயல்படத் துவங்கி, வெடி விபத்து நேரிட்டது என்று, பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்தக் கிணற்றிலிருந்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வாயு வெளியேறியது. ஆயில் இந்தியா நிறுவனம் உடனடியாக எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனத்தின் உதவியை நாடியது. உடனே ஓஎன்ஜிசி தனது நெருக்கடி மேலாண்மை குழுவை அனுப்பியது. ஆயில் இந்தியா நிறுவனம் சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் M/sஅலர்ட் டிசாஸ்டர் கண்ட்ரோல் என்ற நிறுவனத்தையும் நாடியது.

நிபுணர்களின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளையும் பின்பற்றியவாறு கிணற்றை மூடத் திட்டமிடப்பட்டது. கிணறு உள்ள இடத்தில் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 9 ஜூன் 20 20 அன்று மதியப் பொழுதின் போது, கிணற்றில் தீப்பிடித்தது. கிணற்றைச் சுற்றியுள்ள சுமார் 200 மீட்டர் பகுதிகளுக்கு தீ பரவியது. தீப்பிடித்ததற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை அமைச்சர், அசாம் முதல்வர் சர்பானந்த சேனாவால் நேற்று காணொலி மூலமாக ஆயில் இந்தியா, ஓஎன்ஜிசி, சர்வதேச நிபுணர்கள், மத்திய பெட்ரோலியம் இயற்கை வாயு அமைச்சக அதிகாரிகள் ஆகியோருடன் நிலைமை குறித்து பரிசீலனை செய்தார்.

உயிருக்கும், உடமைக்கும் இழப்பு ஏற்படும் என்று மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை அகற்றுவதன் அவசியத்தை அசாம் முதல்வர் வலியுறுத்தினார். மத்திய பெட்ரோலியம் இயற்கை வாயு அமைச்சகமும், ஆயில் இந்தியா நிறுவனமும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான், அசாம் முதல்வருக்கு உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமும், இழப்பீடும் மாநில அரசு இறுதியாக்குவதன் படி வழங்கப்படும்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத்துறை அமைச்சர் .பிரதான் இன்று காணொலி மூலம், விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள நெருக்கடி மேலாண்மைக் குழு, ஆயில் இந்தியா நிறுவன அதிகாரிகள், அமைச்சக அதிகாரிகள் ஆகியோருடன் நிலைமை குறித்து பரிசீலித்தார்.

எண்ணெய்க் கிணற்று சுற்றுப்பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் பரவியிருந்த தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிணற்றில் உள்ள வாயு நெருப்பாக எரிந்து கொண்டிருப்பது, கிணற்றின் வாய் மூடப்படும் வரை தொடர்ந்து எரிந்து கொண்டுதான் இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x