Published : 09 Jun 2020 08:06 PM
Last Updated : 09 Jun 2020 08:06 PM

2 மாதங்களில் ரூ.11,540 கோடி; குறைந்த சம்பளதாரர்களுக்கு முன்பணம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நடவடிக்கை 

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 36.02 லட்சம் பேருக்கு நிதியை விடுவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த ஏப்ரல் மற்றும் மே 2020 ஆகிய இரண்டு மாதங்களில் அதன் உறுப்பினர்களுக்கு 11,540 கோடி ரூபாய் விநியோகித்துள்ளது. இதில், 15.54 லட்சம் விண்ணப்பங்கள், 4580 கோடி ரூபாய், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) திட்டத்தின் கீழ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கோவிட்-19 முன் பணம் தொடர்புடையது.

கொவிட்-19 காரணமாக வழங்கப்பட்ட முன்பணம், இந்தக் கடினமான காலங்களில் EPFOஇன் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருந்தது, குறிப்பாக மாத ஊதியம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள உறுப்பினர்களுக்கு. கோவிட்-19 முன்பணம் மூன்று மாதங்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியைப் பெறுதல் அல்லது EPF கணக்கில் உறுப்பினரின் வைப்பில் 75 சதவீதம் வரை, இதில் எது குறைவாக இருந்ததோ அது வழங்கப்பட்டது. பல தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரணம் அளிக்கப்பட்டதால், அவர்களை கடனில் சிக்காமல் தடுத்துள்ளது.

ஊரடங்குக் காலகட்டத்தில் மொத்த உரிமை கோருபவர்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15,000 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்கள் என்பது அவர்களின் அடிப்படை ஊதிய விகிதத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதிக ஊதியம் பெறுபவர்களில் 50,000க்கு மேல் ஊதியம் பெற்றவர்களில் வைப்பு நிதிக்காக விண்ணபித்தவர்கள் வெறும் 2 சதவீதம் மட்டுமே. ஏறக்குறைய 24 சதவீத விண்ணப்பக் கோரல்கள் 15,000 ரூபாய்

முதல் 50,000 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களிடமிருந்தே கோரப்பட்டிருந்தன.

தாமாக முன்வந்து அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பணியாளர்களுடன், EPFO ஒவ்வொரு வேலை நாளிலும் சுமார் 80,000க்கும் மேற்பட்ட விண்ணப்பக் கோரல்களுக்காக 270 கோடி ரூபாயை விநியோகித்ததின் மூலம், நெருக்கடி காலங்களில் அதன் உறுப்பினர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஆதரவை உறுதி செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x