

83 நாட்களாக எந்த விலைமாற்றமும் செய்யாத பொதுத்துறை நிறுவனங்கள் சர்வேத சந்தையில் கச்சா எண்ணெய் விலைஉயர்ந்தவுடன் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலைையை உயர்த்தியுள்ளன
பெட்ரோல் லிட்டருக்கு 54 பைசாவும், டீசலில் லிட்டருக்கு 58 பைசாவும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த 3 நாள் விலை உயர்வுமூலம் பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய் 74 பைசாவும், டீசல் லிட்டருக்கு ஒருரூபாய் 78 பைசாவம் உயர்ந்துள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் பெட்ரோல், டீசலில் லி்ட்டருக்கு 60 பைசா தொடர்ந்து உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72.46 பைசாவிலிருந்து ரூ.73 ஆகவும், டீசல் லி்ட்டர் ரூ.70.59 பைசாவிலிருந்து ரூ.71.17 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.77.08 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.69.74 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 82 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் இல்லை. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும், தொடர்ந்து 2-வது நாளாக விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
கடந்த மார்ச் 16-ம் தேதிதான் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.
நுகர்வோர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் மே 6-ம் தேதி மத்திய அரசு கலால் வரியை பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியும், டீசலில் ரூ.13 உயர்த்தியும் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போது அந்த பலனை மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால், இப்போது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததும், உடனடியாக அந்த விலை உயர்வு மக்கள் மீது சுமத்தப்படுகிறது” எனத் தெரிவி்த்தார்