Published : 08 Jun 2020 15:58 pm

Updated : 08 Jun 2020 15:59 pm

 

Published : 08 Jun 2020 03:58 PM
Last Updated : 08 Jun 2020 03:59 PM

தங்கம் விலை உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன?

gold


தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4447 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.35576க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 37352 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 60 பைசா உயர்ந்து 53.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Goldதங்கம் விலை உயர்வுஇன்றைய விலை நிலவரம் என்ன?

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author