Published : 04 Jun 2020 04:33 PM
Last Updated : 04 Jun 2020 04:33 PM

2019- 2020 ஆண்டில் ரயில்வேயில் கூடுதல்  உள்கட்டமைப்பு பணிகள்

2019-20ஆம் ஆண்டில் புதியபாதை, இரட்டிப்புப்பாதை, அகலப்பாதை அமைப்பது 2,226 தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக ரூ.39,836 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

2019-20ஆம் ஆண்டில் இந்திய ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் நடவடிக்கை எடுத்தது. 2019-2020ஆம் ஆண்டு திருத்தப்பட்ட படஜெட்டில், மூலதன செலவினங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,61,351 கோடி. இது கடந்த 2018-19ஆம் ஆண்டைவிட 20.1 சதவீதம் அதிகம். 2020 மார்ச் இறுதிவரை பயன்பாட்டு செலவு ரூ.1,46,507 கோடியாக இருந்த்து. இது மொத்த ஒதுக்கீட்டில் 90.8 சதவீதம். 2030ஆம் ஆண்டு வரை உத்தேச முதலீடு ரூ.50 லட்சம் கோடி என்ற நிலையில், 2019ஆம் ஆண்டு பட்ஜெட், ரயில்வே நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக மாற வழிவகுத்த்து. 2019-2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய பணிகள்:

புதியபாதை (NL), இரட்டிப்புப்பாதை (DL), அகலப்பாதைமாற்றம்(GC):

2019-20ஆம் ஆண்டில் புதியபாதை, இரட்டிப்புப்பாதை, அகலப்பாதை அமைப்பது
ஆகியவை 2,226 கி.மீ தூரமாக அதிகரிக்கப்பட்டது. இது கடந்த 2009-14ஆம்ஆண்டுகளில் (1,520கி.மீ/ஆண்டு) சாதித்த ஆண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகம். 2019-20ஆம்ஆண்டில், புதியபாதை, அகலப்பாதை மாற்றம் மற்றும் இரட்டிப்புப்பாதைத் திட்டங்களுக்காக ரயில்வேக்கு ஏற்பட்ட செலவு ரூ.39,836 கோடி. இது இந்திய ரயில்வே வரலாற்றில் மிக அதிகமான செலவு.

2019-20ஆம் நிதியாண்டில், இரட்டிப்புப் பாதைத் திட்டங்களுக்கு மட்டும் ரயில்வேக்கு ஏற்பட்ட செலவு ரூ.22,689 கோடி, இது கடந்த 2009-14ஆம் ஆண்டுகளில் (2,462கோடி), ஏற்பட்ட ஆண்டு சராசரி செலவை விட 9 மடங்கு அதிகம். 2019-20ஆம் ஆண்டில் போடப்பட்ட இரட்டிப்புப்பாதை 1458 கி.மீ. இது கடந்த 2009-14ஆம் ஆண்டுகளில் (375 கி.மீ/ஆண்டுக்கு) அமைக்கப்ட்ட பாதையின் ஆண்டு சராசரியை விட 4 மடங்கு அதிகம்.

15 அதிக சிக்கலான திட்டங்களும் அமைக்கப்பட்டன: சிக்கலான இடங்களில் முழு இரட்டிப்புப்பாதைத் திட்டங்களுக்கும், அதன் முன்னேற்றத்துக்கும் ரயில்வே முன்னுரிமை அளித்தது. கவனமான முயற்சிகளுடன், 15 சிக்கலான திட்டங்கள் 562 கி.மீ தூரத்துக்கு ரூ.5,622 கோடி செலவில் அமைக்கப்பட்டன. இவற்றில் 13 திட்டங்கள் 2019-20ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டன.

முக்கிய வடகிழக்குத் திட்டங்கள் தொடக்கம்:

* திரிபுராவில் 112 கி.மீ நீளத்துக்கு தேசியத் திட்டத்தின் கீழ் புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டது. ‘‘அகர்தாலா-சபூரம்’’ இடையிலான பாதை 2019-20ஆம் நிதியாண்டில் அமைக்கப்பட்டது .

* லம்டிங் முதல் ஹோஜாய் வரை 45 கி.மீ நீளத்துக்கு இரட்டிப்பு ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு தொடங்கப்பட்டது.

ரயில்வே மின்மயமாக்கல்: 2019-20ஆம் நிதியாண்டில், ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் மொத்தம் 5,783 கி.மீ தூரத்துக்கு முடிக்கப்பட்டன. இவற்றில் 4,378 கி.மீ தூரம் 2020ம் ஆண்டு மார்ச் வரை மின்மயமாக்கப்பட்டன. மொத்தம் 1273 கி.மீ நீளமுள்ள 28 திட்டங்கள், 2019-20ஆம் நிதியாண்டில் முடிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x