சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

நேற்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்ததன் தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தைகளும் உயர்ந்து முடிந்தன. கடந்த இரு வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தைகள் உயர்ந்திருக்கின்றன.

சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்து 25963 புள்ளியில் முடிவடைந்தது. ஆனால் வர்த் தகத்தின் இடையே 300 புள்ளி கள் வரை உயர்ந்து 26000 புள்ளி களுக்கு மேலே வர்த்தகமானது. நிப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 7899 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 7900 புள்ளிகளுக்கு மேலே வர்த்தக மானது.

துறைவாரியான குறியீடுகளில் வங்கித்துறை குறியீடு 1.42 சதவீதம் உயர்ந்தது. மின் துறை குறியீடு, ஹெல்த்கேர், டெக்னாலஜி ஆகிய குறியீடுகள் உயர்ந்து முடிந்தன. மாறாக கன்ஸ்யூமர் டியூரபிள், ஆயில் அண்ட் கேஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.

முக்கிய குறியீடுகள் உயர்ந் திருந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பங்கு களில் பார்தி ஏர்டெல், சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, விஇடிஎல் மற்றும் ஹீரோமோட்டோ கார்ப் ஆகியவை உயர்ந்து முடிந்தன. மாறாக பிஹெச்இஎல், டாக்டர் ரெட்டீஸ், எல் அண்ட் டி மற்றும் கோல் இந்தியா ஆகியவை சரிந்து முடிந்தன.

அமெரிக்க வங்கி கூட்டம்

நேற்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் தொடங்க இருக்கிறது. வட்டி விகிதம் தொடர்பான முடிவு இன்று மாலை அறிவிக்கப்படும். இந்த முடிவு இந்திய பங்குச்சந்தை மற்றும் கரன்ஸி சந்தையின் முடிவுகளை பாதிக்கும். அமெரிக்க மத்திய வங்கி 2006-ம் ஆண்டிலிருந்து இதுவரை வட்டியை உயர்த்தியதில்லை.

ஆனால் 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 17 முறை வட்டியை உயர்த்தி இருக்கிறது. ஒரு சதவீத அளவில் இருந்த வட்டி 5.25 சதவீதம் அளவு வரை உயர்த்தப்பட்டது. அப்போதுதான் இந்தியாவில் வளர்ச்சி அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை வர்த்த கத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து 911 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை வெளியே எடுத் தனர். இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை ஆகும். வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in