

மருந்துப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிப்லா நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த சேஸ் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தில் 2.10 கோடி டாலரை முதலீடு செய்துள்ளது.
வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேஸ் நிறுவனம் தற்போது அல்ஸீமர் நோய் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த மருந்து தயாரிப்பில் தன்னையும் இணைத்துக் கொள்வதற்காக இத்தகைய முதலீட்டை சிப்லா நிறுவனம் செய்துள்ளது.
சிப்லாவின் துணை நிறுவனமாக பிரிட்டனில் செயல்படும் சிப்லா (இ.யூ.) லிமிடெட் நிறுவனம் மூலம் இத்தகைய முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. சேஸ் நிறுவனத்தின் 14.6 சதவீத பங்குகளை வாங்குவதற்கு 15 லட்சம் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.