Published : 29 May 2020 09:02 PM
Last Updated : 29 May 2020 09:02 PM

தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிப்பு

புதுடெல்லி

ஏப்ரல், 2020க்கான அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடு (CPI-IW) 3 புள்ளிகள் அதிகரித்து 329 (முந்நூற்று இருபத்தி ஒன்பது) ஆக இருந்தது.

1 மாத சதவீத மாற்றத்தில், 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் (+) 0.92 சதவீதமாக இருந்தது இது முந்தைய ஆண்டின் இதே மாதங்களுக்கு இடையில் ஒப்பிடும் போது (+) 0.97 சதவீதத்துடன் அதிகரித்துள்ளது.

நடப்புக் குறியீட்டில் அதிகபட்ச புள்ளி ஏற்றத்தின் மொத்த மாற்றத்திற்கு உணவுக்குழு பங்களிப்பு (+) 2.43 சதவீதப் புள்ளிகளாக இருந்தது முக்கிய காரணம். உணவுப்பொருள்களில், அரிசி, கோதுமை, கோதுமை ஆட்டா, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடுகு எண்ணெய், புதிய மீன், ஆடு இறைச்சி, வளர்ப்புப் பறவைகள் (கோழி), கத்திரிக்காய், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பிரஞ்சு பீன், பச்சை கொத்தமல்லி இலைகள், வெண்டைக்காய், பாலக் கீரை, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, தக்காளி, வாழைப்பழம், எலுமிச்சை, மா (பழுத்த), சர்க்கரை மற்றும் சமையல் எரிவாயு போன்றவை குறியீட்டு அதிகரிப்புக்குக் காரணமாகின்றன. இருப்பினும், இந்த அதிகரிப்பு பூண்டு, வெங்காயம், கோவைக்காய், பெட்ரோல், பூக்கள் / மலர் மாலைகள் போன்றவற்றால் சரிபார்க்கும் வகையில் இது குறியீட்டில் புள்ளிகளின் இறக்கத்தில் பங்குவகித்தது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அனைத்து பொருள்களின் பணவீக்கம் 2020 ஏப்ரல் மாதத்தில் 5.45 சதவீதமாக இருந்தது, இது முந்தைய மாதத்திற்கு 5.50 சதவீதமாகவும், முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 8.33 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல், உணவுப் பணவீக்கம் முந்தைய மாதத்தின் 6.67 சதவீதத்திலிருந்து 6.56 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 4.92 சதவீதமாகவும் இருந்தது.

மத்திய அளவில், டூம்-டூமா டின்சுகியா அதிகபட்சமாக 14 புள்ளிகளையும், சேலம் (12 புள்ளிகள்) மற்றும் சூரத் (10 புள்ளிகள்) பதிவு செய்தது. மற்றவற்றில், 2 மையங்களில் 9 புள்ளிகள் அதிகரிப்பு, மற்றொரு 2 மையங்களில் 8 புள்ளிகள், 3 மையங்களில் 7 புள்ளிகள், 2 மையங்களில் 6 புள்ளிகள், 5 மையங்களில் 5 புள்ளிகள், மற்றொரு 5 மையங்களில் 4 புள்ளிகள், 11 மையங்களில் 3 புள்ளிகள், 10 மையங்களில் 2 புள்ளிகளும், 18 மையங்களில் 1 புள்ளியும் பதிவு செய்தது. மாறாக, சிந்த்வாரா, வதோதரா, பிலாய், யமுனநகர் மற்றும் ஜாம்ஷெட்பூர் ஆகியவை தலா 1 புள்ளிகள் குறைந்துள்ளன. மீதமுள்ள 12 மையங்களின் குறியீடுகள் நிலையானவை.

33 மையங்களின் குறியீடுகள் அகில இந்தியக் குறியீட்டை விட அதிகமாகவும், 44 மையங்களின் குறியீடுகள் தேசிய சராசரிக்கும் குறைவாக உள்ளன. ரூர்கேலா மையத்தின் குறியீடு அகில இந்திய குறியீட்டுக்கு இணையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x