

தற்போது அளிக்கப்பட்டிக்கும் பேமெண்ட் வங்கிகளால் மக்களின் வங்கி சார்ந்த பழக்கம் மாறும் என்றும் அதிக மக்களுக்கு முறையான வங்கிச் சேவை கிடைக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். பேமெண்ட் வங்கிகள் மொத்த வங்கித்துறையையும் மாற்றும் என்றும் அவர் கூறினார்.
புதுடெல்லியில் நடந்த இந்தியன் வங்கி விழாவில் இவ்வாறு கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 நிறுவனங்கள்/ தனிநபர்கள் பேமெண்ட் வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது. இந்த வங்கிகள் அடுத்த 18 மாதங்களில் தங்களது சேவையைத் தொடங்கும்.
பேமெண்ட் வங்கிகள் வந்த பிறகு மக்களின் சிந்தனை, சேமிக்கும் பழக்கம், செலவழிக்கும் பழக்கம் மாறும். இதன் மூலம் வங்கிச்சேவை கிடைக்காத ஒவ் வொரு இந்தியருக்கும் வங்கிச் சேவையைக் கொடுக்க முடியும்.
பேமெண்ட் வங்கிகள் வந்த பிறகு சிறு சிறு வர்த்தகங்களுக்கு கூட பேமெண்ட் வங்கி மூலமாக நடக்கும். வர்த்தகங்கள் அதிகரிக் கும். இது இந்திய பொருளா தாரத்திலும் எதிரொலிக்கும். இது இந்திய வங்கித்துறைக்கும் இந்திய மக்களிடையேயும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதுவரை வங்கிக் கிளைகளை விரிவுபடுத்தியதில் ஓரளவுக்கு நாம் திருப்தி அடைந்தாலும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றார்.
பேமெண்ட் வங்கிகள் அதிக பட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட் பெற முடியும். அவர்கள் டெபிட் கார்டு வழங்கலாம். ஆனால் கடனோ அல்லது கடன் அட்டையோ வழங்க முடியாது. அதேபோல வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இங்கு கணக்கு தொடங்க முடியாது.
வாராக்கடன் குறையும்
வரும் காலாண்டுகளில் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் குறையும் என்று மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். ஜூன் 30-ம் தேதி முடிவடைந்த காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 6 சதவீதமாக இருக் கிறது. அதற்கு முந்தைய மார்ச் காலாண்டில் 5.2 சதவீதமாக இருந்தது. தற்போது இருக்கும் வாராக்கடன் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. அனுபவ குறைவு மற்றும் கடந்த காலங்களில் செயலற்ற நிலை கூடவே பொருளாதார மந்த நிலையும் இருந்ததால் வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. மேலும் சில குறிப்பிட்ட துறைகளின் மந்த நிலைமையும் இதற்கு ஒரு காரணமாகும்.
இந்த நிலைமையை மாற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கிறது. வங்கி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அரசாங்கமும் தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது. வங்கிகளுக்குத் தேவையான மூலதனத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் பங்குகளை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்டீல், மின்சாரம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அதிக வாராக்கடன் இருக்கிறது. அந்த துறைகளின் பிரச்சினைகளை களைய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாராக்கடன் குறையும்.
வாராக்கடன் அதிகரிக்க உள்நாட்டு சூழ்நிலைகளை தாண்டி யும் புறச்சூழல் காரணமாகவும் வாராக்கடன் அதிகரிக்கிறது. அடுத்த சில காலாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் இந்த பிரச்சினைகளை சமாளிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
முன்னதாக இந்தியன் வங்கி யின் 109 கிளைகளை ஜேட்லி தொடங்கி வைத்தார். இதன் மூலம் இந்தியன் வங்கி கிளைகளின் எண்ணிக்கை 2500யை தாண்டியது.