15 கோடி பொருள்கள் விற்பனை: பிளிப்கார்ட் சாதனை

15 கோடி பொருள்கள் விற்பனை: பிளிப்கார்ட் சாதனை
Updated on
1 min read

இணையதளம் மூலம் பொருள் களை விற்பனை செய்யும் பிளிப்கார்ட் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 15 கோடி பொருள்களை விற்பனை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நடைபெற்ற விற்பனையைக் காட்டிலும் 150 சதவீத வளர்ச்சியை தங்கள் நிறுவனம் எட்டியுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஒப்பீட்டு அளவிலான வளர்ச்சியை நிறுவனம் குறிப்பிடாவிட்டாலும் தற்போது விற்பனையான 15 கோடி பொருள்கள் இந்த ஆண்டில் 8 மாதங்களில் ஆனதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஃபேஷன், லைஃப்ஸ்டைல், வீட்டு உபயோக பொருள்கள், நுகர்வோர் மின்னணு கருவிகள் உள்ளிட்ட பொருள்களை கடந்த 8 ஆண்டுகளாக இந்நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்குவோரில் அதிக எண்ணிக் கையிலானவர்கள் உள்ள நகரங்களில் பெங்களூரு முதலிடத்திலும், இதையடுத்து டெல்லி, சென்னை, புணே, கோவை, அகமதாபாத் நகரங்கள் வருவதாக தெரியவந்துள்ளது.

70 பிரிவுகளில் 3 கோடிக்கும் அதிகமான பொருள்களை இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறது. புத்தகம், நுகர்வோர் மின்னணு சாதனம் உள்ளிட்ட பொருள்களும் இதில் அடங்கும். இந்நிறுவனத்தில் பதிவு பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை 4.5 கோடியாகும்.

இந்நிறுவன இணையதளத்தை தினசரி ஒரு கோடி பேர் பார்வை யிடுவதாகவும், வர்த்தகர்கள் தங்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற வசதியை நிறுவனம் செய்துள்ளதாகவும் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால் கூறினார்.

ஒரு ஆண்டுக்கு 100 கோடி பொருள்களை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டு தங்கள் நிறுவனம் இயங்கி வருவதாக மற்றொரு நிறுவனரான முகேஷ் பன்சால் கூறினார். பிளிப்கார்டுடன் இணைந்து தங்கள் பொருள்களை விற்பனை செய்யும் பணியில் 30 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in