கச்சா எண்ணெய் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 2545 ஆயிரம் மெட்ரிக் டன்கள்

கச்சா எண்ணெய் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 2545 ஆயிரம் மெட்ரிக் டன்கள்
Updated on
1 min read

2020 ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2545.81 ஆயிரம் மெட்ரிக் டன்னாகும். இது மாதாந்திர இலக்கை விட 1.44 சதவீதம் குறைவாகும். 2019 ஏப்ரல் மாதம் அடைந்த உற்பத்தியை விட 6.35 சதவீதம் குறைவாகும்.
இயற்கை வாயு உற்பத்தி

2020 ஏப்ரலில் இயற்கை வாயு உற்பத்தி 2161.33 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர் ஆகும். இந்த மாத இலக்கை விட இது 10.88 சதவீதம் குறைவாகும். 2019 ஏப்ரல் மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 18.62 சதவீதம் குறைவாகும்.
சுத்திகரிப்பு உற்பத்தி ( கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு)

2020 ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தி 14745.18 ஆயிரம் மெட்ரிக் டன்னாகும். இது மாதாந்திர இலக்கை விட 22.01 சதவீதம் குறைவாகும். 2019 ஏப்ரல் மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 28.78 சதவீதம் குறைவாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in