காலாண்டு நிதி பற்றாக்குறை ரூ. 2.86 லட்சம் கோடி

காலாண்டு நிதி பற்றாக்குறை ரூ. 2.86 லட்சம் கோடி
Updated on
1 min read

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பற்றாக்குறை முந்தைய ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 51.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் எதிர்பார்ப்பைவிட இது அதிகரித்து ரூ. 2.86 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் ஓரளவு முன்னேற்றம் தென்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.55 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக் கணக்கு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தணிக்கை அதிகாரி நடப்பு நிதி ஆண்டில் வரி வருவாய் ரூ. 1.01 லட்சம் கோடியாக அதாவது 11.1 சதவீதம் கூடுதலாக கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் அரசின் வரு மானம் ரூ. 1.44 லட்சம் கோடியா கும். இது எதிர்பார்க்கப்பட்டதை விட 11.8 சதவீதம் கூடுதலாகும். இதே காலகட்டத்தில் அரசின் செலவினம் ரூ. 4.31 லட்சம் கோடியாகும். இது நடப்பு நிதி ஆண்டின் செலவுத் தொகையில் 24.2 சதவீதமாகும்.

மொத்த செலவினத்தில் திட்ட செலவு ரூ. 1.14 லட்சம் கோடி யாகும். திட்டம் சாரா செலவு ரூ. 3.16 லட்சம் கோடியாகும். மூன்று மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ. 2.31 லட்சம் கோடி. இது பட்ஜெட் மதிப்பில் 58.6 சதவீதமாகும்.

நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.55 லட்சம் கோடியாக அதாவது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீத அளவுக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்ட பற்றாக்குறை அளவில் பாதிக்கும் மேலாக முதல் காலாண்டிலேயே ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வரி வருமானமும் போதுமான அளவுக்கு ஈடுகட்டக் கூடியதாக கிடைத்துள்ளது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

இதனால் நடப்பு நிதி ஆண்டில் பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதத்துக்கு மேலாக அதிகரிக்காது என்று நிதி அமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in