

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன் ப்ளஸ், தங்களின் அடுத்த மாடல் ஒன் ப்ளஸ் 8 சீரிஸ் 5ஜி மொபைல் விற்பனையை இந்தியாவில் மே 29 முதல் அமேசான் தளம் மூலமும், பிரத்யேக கடைகள் மூலமும் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
மே 18 அன்று குறிப்பிட்ட அளவு விற்பனையாக மதியம் 2 மணி அளவில் விற்பனை தொடங்கும். ஒன் ப்ளஸ் 8 ப்ரோ 5ஜி மாடலில் ரூ.3000 தள்ளுபடியும், ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் 5ஜி மாடலில் ரூ.2000 தள்ளுபடியும் அறிமுகச் சலுகையாகக் கிடைக்கும். 12 மாத வட்டியில்லா தவணையிலும் அமேசான் மூலம் இந்த மொபைலை வாங்கலாம்.
இந்தியாவில் ஒன் ப்ளஸ் 8 மாடலின் ஆரம்ப விலை ரூ.41,999. இது 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவு கொண்டது. இதே மாடலில் 8 ஜிபி ராம் வகை ரூ.44,999 என்ற விலைக்குக் கிடைக்கும். ஒன் ப்ளஸ் 8 ப்ரோ விலை ரூ.54,999. இது 8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி கொள்ளளவு கொண்டது. இதில் அதிகபட்சமாக 12 ஜிபி ராம் மற்றும் 256 ஜிபி கொள்ளளவு மாடலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ.59,999.