Published : 13 May 2020 08:13 PM
Last Updated : 13 May 2020 08:13 PM

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு 4 மாதங்கள் நீ்ட்டிப்பு

2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதாவது:
‘‘2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குத்தாக்கல் செய்ய காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30-ம் தேதி வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்.’’ என அறிவித்தார்.

இதனால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூலை 31-ம் தேதி இறுதி நாளாகும். இது தற்போது நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x