

புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் 100 முன்னணி நிறுவனங்களில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. போர்ப்ஸ் தயாரித்த இந்தப் பட்டியலில் ஹிந்துஸ்தான் லீவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா மோட்டார் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் முதலிடத்தைப் பிடித் துள்ளது.
அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள எப்எம்சிஜி நிறுவ னமான ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் 41-வது இடத்திலும், டிசிஎஸ் 64-வது இடத்திலும், சன் பார்மா 71-வது இடத்திலும் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் என்ற தலைப்பில் 100 தலை சிறந்த நிறுவனங்களை போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2,550 கோடி டால ராகும். ஆப்பிள் நிறுவனத் தின் ஸ்டீவ் ஜாப்ஸைப் போல இந்நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்கும் மிகவும் விரும்பத் தக்க தலைவராக போற்றப் படுகிறார். ஆப்பிள் நிறுவனத் தைப் போலவே இதுவும் புத்தாக் கமான யோசனைகளோடு செயல்| படுவதாக போர்ப்ஸ் தெரிவித் துள்ளது.
ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் 35 பிராண்டுகளில் 20 பிரிவுகளில் பொருள்களைத் தயாரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
8 வது முறையாக டிசிஎஸ்
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ்-இன் சந்தை மூலதனம் 8,030 கோடி டாலராகும். இந்நிறுவனம் 8 வது முறையாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது. அதாவது மூன்று பணியா ளர்களில் ஒருவர் பெண் என்ற விகிதத்தில் இந்நிறுவன பணியாளர்கள் உள்ளதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சன் பார்மாவின் சந்தை மூலதனம் 3,900 கோடி டாலராகும். இந்தியாவிலுள்ள மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமாக இது திகழ்வதோடு நான்காவது முறையாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் சேர் ஸ்போர்ஸ்.காம் நிறுவனம் இரண் டாவது இடத்திலும், அமேசான் 8 வது இடத்திலும், ஹெர்ம்ஸ் இண்டர்நேஷனல் 22 வது இடத்திலும் நெட்பிளிக்ஸ் 27 வது இடத்திலும் மாஸ்டர் கார்டு 36 வது இடத்திலும், ஸ்டார் பக்ஸ் 45 வது இடத்திலும், அடோப் 74 வது இடத்திலும், கோக கோலா 81வது இடத்திலும் காக்னிசன்ட் 96வது இடத்திலும் உள்ளன.
நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப் புகளுக்கு செலவிடுவது, அவற்றின் சந்தை மூலதனம், நிகர மதிப்பு, தற்போதைய தொழிலில் அவற்றுக்குள்ள நிதி வளம் ஆகியவற்றின் அடிப் படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.