Published : 11 May 2020 15:34 pm

Updated : 11 May 2020 15:34 pm

 

Published : 11 May 2020 03:34 PM
Last Updated : 11 May 2020 03:34 PM

பல நாட்களுக்குப் பிறகு தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடக்கம்; விபத்தை தவிர்க்க வழிகாட்டும் நெறிமுறைகள்: வெளியிட்டது மத்திய அரசு

ndma-mha-issues-guideline-on-restarting-manufacturing-industries-after-the-lockdown-period
பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

முடக்கநிலை காலத்துக்குப் பிறகு தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின்படி மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தாக்குதலை அடுத்து மார்ச் 25ஆம் தேதியில் இருந்து நாடு முழுக்க முடக்கநிலை அமல் செய்யப்பட்டது. சில மண்டலங்களில் முடக்கநிலை படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதால், 2020 மே 1ஆம் தேதியிட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மத்திய உள்துறையின் உத்தரவு படி சில பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.

முடக்கநிலை காலத்தில் பல வாரங்களாக தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால், சில செயல்பாடுகளில் தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன் விளைவாக, சில உற்பத்தி நிலையங்களில், குழாய்கள், வால்வுகளில் ரசாயனக் கழிவுகள் தேங்கியிருந்து, அவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக மாறியிருக்கலாம்.

ஆபத்தான ரசாயனப் பொருள்கள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் பொருள்களை சேமித்து வைத்திருக்கும் மையங்களிலும் இதே ஆபத்துக்கு வாய்ப்பு உள்ளது.

ரசாயன தொழிற்சாலைகளைக் கையாள்வதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பிறப்பித்துள்ளது.

1. ரசாயனப் பேரிடர்களுக்கான வழிகாட்டுதல், 2007

2. ரசாயன (பயங்கரவாதம்) பேரிடர் மேலாண்மைக்கான வழிகாட்டுதல்கள் 2009 மற்றும்

3. பி.ஓ.எல். டேங்கர்களின் போக்குவரத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துதல் வழிமுறைகள் 2010.

சுற்றுச்சூழல் சட்டம் 1086இன் கீழ் ஆபத்தான ரசாயனப் பொருள்கள் உற்பத்தி, சேமிப்பது மற்றும் இறக்குமதி விதிகள் 1989இன் விதிமுறைகளின்படி, இந்தத் தொழிற்சாலைகளுக்கான சட்டப்பூர்வத் தேவைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

கதவடைப்பு நடைமுறைகள் அமலில் இல்லாத காலத்தில், மின்சார, மெக்கானிக்கல் அல்லது ரசாயன சாதனங்களை பராமரித்தல் அல்லது சர்வீஸ் செய்யும் பொறுப்பில் உள்ள ஆப்பரேட்டர்கள், மேற்பார்வையாளர்களுக்கு, மின்சார வசதிகள் மூலமாக ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. கனரக இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாவிட்டால், ஆப்பரேட்டர்கள், பொறியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக அவை மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.

தீ பிடிக்கக் கூடிய திரவங்கள், அடைத்து வைக்கப்பட்ட எரிவாயுப் பொருள்கள், திறந்த நிலையில் உள்ள வயர்கள், கன்வேயர் பெல்ட்கள், தானியங்கி வாகனங்கள் ஆகியவை உற்பத்தி நிலையத்தில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக அமல் செய்யாமல் போவது, சரியாக லேபிள் குறிக்காத ரசாயனங்களை கையாள்வது போன்றவை ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் ஆபத்து உள்ளது.

எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தால், அவசர சூழ்நிலையை சமாளிப்பது சவால் மிகுந்ததாக இருக்கும். ஆபத்து வாய்ப்புகளைக் குறைப்பதற்கும், தொழிற்சாலைப் பிரிவுகளை நல்லபடியாக மீண்டும் தொடங்குவதற்கும், பின்வரும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

அந்தந்த பெரிய விபத்து வாய்ப்பு (எம்.ஏ.எச்.) குறித்த, களத்துக்கு வெளியிலான பேரிடர் மேலாண்மை வசதிகள் சமீப காலத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும், அவற்றை அமல் செய்வதற்கு முழு ஆயத்த நிலையில் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலை கள அளவிலான பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் சரியாக உள்ளனவா என்பதை மாவட்டத்தின் பொறுப்பு அதிகாரிகள் அனைவரும் உறுதி செய்ய வேண்டும். கோவிட்-19 முடக்கநிலை காலத்திலோ அல்லது அதற்குப் பிந்தைய காலத்திலோ தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்கு, தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

NDMA(MHA) issues guideline on restarting manufacturing industries after the lockdown periodபல நாட்களுக்குப் பிறகு தொழிற்சாலைகளில் உற்பத்திவிபத்தை தவிர்க்க வழிகாட்டும் நெறிமுறைகள்வெளியிட்டது மத்திய அரசு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author