வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஒரு சதவீத வட்டி குறைப்பு அவசியம்

வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஒரு சதவீத வட்டி குறைப்பு அவசியம்
Updated on
1 min read

தற்போது பணவீக்கம் குறைவாக இருக்கிறது. ஒரு சதவீதம் வட்டி குறைப்பு செய்யும் பட்சத்தில் அது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நிதி ஆயோக் தலைவர் அரவிந்த பனகாரியா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி னார். மேலும் அவர் கூறியதாவது.

அடுத்த முறை வட்டிக் குறைப்பு நிச்சயம் இருக்கும் என்று நினைக்கிறேன். 0.50 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை வட்டி குறைப்பு இருக்கும். மொத்தவிலைக் குறியீட்டு எண் 10 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைந்திருக்கிறது. சில்லரை பணவீக்கம் எதிர்மறையாக இருக்கிறது. இந்த சமயத்தில் வட்டிக் குறைப்பு செய்வதுதான் சரியாக இருக்கும்.

ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் சரியா அல்லது தவறா என்று விமர்சிக்கும் நோக்கம் என்னுடையதல்ல. நான் அவரை, அவருடைய முடிவுகளை மதிக்கிறேன். அவர் பணவீக்கம் பற்றிக் கொஞ்சம் கவலைப்படுகிறார். அதனால் வழக்கமான நடைமுறையை மீறி அவர் முடிவுகள் எடுப்பதில்லை.

இப்போது பணவீக்கம் குறைவாக இருப்பதினால் அவர் திருப்தி அடைந்திருப்பார். அதனால் வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பொருளாதாரம் குறித்து பேசிய போது நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத அளவுக்கு வளர்ச்சி இருக்கும். அடுத்த 4 நிதி ஆண்டுகளுக்குள் இரட்டை இலக்க வளர்ச்சியை இந்தியா அடையும். அதேபோல கடந்த நிதி ஆண்டுகளைவிட நடப்பு நிதி ஆண்டில் விவசாய வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in