Last Updated : 06 May, 2020 06:56 PM

 

Published : 06 May 2020 06:56 PM
Last Updated : 06 May 2020 06:56 PM

ஏப்ரல் மாதத்தில் பணியமர்த்தல் விகிதம் 62% குறைவு: நௌக்ரி.காம் அறிக்கை

கரோனா நெருக்கடி காரணமாக தேசிய ஊரடங்கால், இந்தியாவில் பணியமர்த்தல் விகிதம் 62 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று வேலைவாய்ப்பு இணையதளமான நௌக்ரி.காம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வருட ஏப்ரல் மாதத்தை விட இந்த ஏப்ரல் மாதம் , உணவகங்கள், பயணம், விமானத்துறை என பல்வேறு துறைகளில் 90 சதவீதம் அளவு வேலைக்கு ஆட்கள் எடுப்பது குறைந்துள்ளது. மேலும் மருத்துவத் துறை, ஆடோ ஆன்சிலரி துறை, நிதித் துறை ஆகியவற்றிலும் 70 சதவீதத்துக்கும் அதிகமாக பணியமர்த்தல் விகிதம் குறைந்துள்ளது. ஒப்பீட்டு அளவில் மருந்தகம், பயோடெக், மருத்துவ ஆராய்ச்சி, ஐடி மென்பொருள் சேவை, காப்பீடு ஆகிய துறைகளில் பாதிப்பு சற்று குறைவாக இருக்கிறது.

நகர வாரியான கணக்கைப் பொருத்தவரை டெல்லியில் 70 சதவிதம், சென்னையில் 62 சதவீதம், கொல்கத்தாவில் 60 சதவீதம், மும்பையில் 60 சதவீதம் பணியமர்த்தல் விகிதம் குறைந்துள்ளது. இது ஆரம்ப நிலையிலிருந்து, அனுபவமுள்ளவர்களை பணியமர்த்துதல் என எல்லா நிலைகளிலும் எதிரொலித்துள்ளது. 8லிருந்து 12 வருட அனுபவமுள்ளவர்களை பணியமர்த்துவது 55 சதவீதமும், மூத்த பதவிகளுக்கான 13-16 வருட அனுபவமுள்ளவர்களைப் பணியமர்துவது 52 சதவீதமும், தலைமைப் பொறுப்புக்கான 16+ வருட அனுபவமுள்ளவர்களைப் பணியமர்த்துவது 50 சதவீதமும் குறைந்துள்ளது.

தற்போது வேலையிலிருந்து நீக்கப்பட்டு, உடனடியாக பணியில் சேர தயாராக இருப்பவர்களின் பக்கங்களுக்கு முன்னுரிமை தருவதாக நௌக்ரி.காம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x