Last Updated : 01 May, 2020 02:28 PM

 

Published : 01 May 2020 02:28 PM
Last Updated : 01 May 2020 02:28 PM

தொடர்ந்து 3-வது மாதமாக மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை குறைப்பு: ரூ.600க்கும் கீழ் சரிந்தது

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை தொடர்ந்து மூன்றாவது மாதமாக இன்று குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.162.50 பைசா குறைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் அளிக்கப்படுகிறது. இந்த 12 சிலிண்டருக்கும் அதிகமாக தேவைப்படுவோர் மானியமில்லமல் சந்தை விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

அந்த வகையில் 3 மாதங்களாக தொடர்ந்து விலை குறைக்கப்பட்டதால் சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.581.50 பைசாவாகக் குறைந்தது. கடந்த மாதம் ரூ.744 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால் விமானப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பெட்ரோலிய பொருள் தேவைகுறைந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படு வீழ்ச்சி அடைந்தது.

அமெரிக்காவி்ன் பிரண்ட் கச்சா எண்ணெய் மைனஸ் விலைக்கு சென்றது. பின்னர் மீது 15.98 டாலர் அளவுக்கு சரிந்தது. இந்த விலை வீழ்ச்சியால் சமையல் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன

இதன்பின் குறைக்கப்பட்ட விலையின் கீழ் டெல்லியில் மானியமில்லாத சிலிண்டர் ரூ.581.50பைசா விற்பனை செய்யப்படும். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மானியமில்லாத சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.150.50 பைசா குறைக்கப்பட்டது. அதன்பின் இப்போது அதைக்காட்டிலு்ம் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் 53 ரூபாயும், ஏப்ரல் மாதத்தில் ரூ.61.50 பைசாவும் குறைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.162.50 பைசா குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.277 குறைந்துள்ளது.

கடைகளுக்கும், உணவகங்களுக்கும் விற்பனை செய்யப்படும் வர்த்தக ரீதியான சிலிண்டர் விலை ரூ,1,285 லிருந்து 1,029.50 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x