Published : 13 Aug 2015 10:29 AM
Last Updated : 13 Aug 2015 10:29 AM

இவரைத் தெரியுமா?- அருணா ஜெயந்தி

கேப் ஜெமினி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் உள்ளார்.

2000-வது ஆண்டு இங்கு பணியில் சேர்ந்தவர். 2011-லிருந்து இந்த பதவியில் இருக்கிறார். இந்தியாவில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செலுத்தியவர்.

இதற்கு முன்பு கேப் ஜெமினி அவுட்சோர்ஸிங்கில் விநியோக அதிகாரியாக பணியாற்றியவர். ஐடி துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

1984 முதல் 2000 வரை டிசிஎஸ், ஆப்டெக் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்களுக்காக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

கேப் ஜெமினி நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் பொறுப்புகள் இல்லாத உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

மும்பை நர்சி மனோஜ் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்.

2012ல் பார்ச்சூன் இந்தியா மற்றும் பிசினஸ் டுடே பட்டியலிட்ட சக்தி மிக்க 50 பிசினஸ் பெண்கள் பட்டியலில் இடம்பெற்றவர்.

நாஸ்காம் செயல் கமிட்டியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x