

தற்போது 501 கிளைகள் 50 ஏடிஎம் என 24 மாநிலங்களில் பந்தன் வங்கி தனது செயல்பாட்டினை தொடங்கி இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் 632 கிளைகள் 250 ஏடிஎம்கள் மற்றும் 27 மாநிலங்களில் விரிவடைய பந்தன் திட்டமிட்டிருக்கிறது.
மொத்த கிளைகளில் 71 சதவீதம் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் அதிகபட்சம் 220 கிளைகள் உள்ளன. அதனை தொடர்ந்து பிஹார் (67), அசாம் (60), மகாராஷ்டிரம் (21), உத்தரப்பிரதேசம் (20), திரிபுரா (20) மற்றும் ஜார்கண்டில் 15 கிளைகள் செயல்பட தொடங்கியுள்ளன.
சேமிப்பு கணக்குக்கு 4.25% வட்டி (ஒரு லட்சம் ரூபாய் வரை) நிர்ணயம் செய்யபட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கு 5 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு வருடம் முதல் மூன்று வருட டெபாசிட்டுக்கு அதிகபட்சமாக 8.5 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.