Published : 29 Apr 2020 17:36 pm

Updated : 29 Apr 2020 17:36 pm

 

Published : 29 Apr 2020 05:36 PM
Last Updated : 29 Apr 2020 05:36 PM

கரோனா; ஏடிஎம் தேவையில்லை; ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் பணம் பெறும் வசதி: தபால் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் அறிமுகம்

india-post

சென்னை

கரோனா ஊரடங்கு சூழலில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகைகளை ஆதார் எண்ணைக் கொண்டு எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்திலேயே பெறும் வசதியை கையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது இந்திய அஞ்சல்துறையின்கீழ்,100 சதவிகிதபங்குகளுடன் இந்திய அரசுக்கு சொந்தமானதாக நிறுவப்பபட்டுள்ள வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அணுகுவதற்கு எளிமையான, குறைந்த கட்டணங்களுடன், நம்பகமான வங்கி சேவையினை பொதுமக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் 70 சதவிகித கிராமங்களில் வங்கி கிளை அல்லது ஏ.டி.எம் இயந்திரங்கள் இல்லாத நிலையில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நாடெங்கிலும் பரந்து விரிந்திருக்கும் இந்திய அஞ்சல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளான 1,55,000 அஞ்சலகங்கள், 2,50,000 கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால்காரர்களை பயன்படுத்தி பொதுமக்களின் வீட்டுவாயிலுக்கே அமைப்புசார் நிதிசேவையினைக் கொண்டுசெல்லும் நோக்குடன் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிறைவான சேவைகள் மற்றும் திட்டங்களின் வாயிலாக, தனது வாடிக்கையாளர்களின் அனைத்து நிதிச் சேவைகளுக்கும் ஒரு முழுமையான தீர்வு முனையமாக அமையும்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் எவ்வித படிவங்கள் மற்றும் நகல்களும் இல்லாமல் உடனடியாக கணக்குகள் தொடங்கப்படும். இவ்வங்கியின் சேமிப்புக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புதொகை எதுவும் பராமரிக்கத் தேவையில்லை, ஆண்டிற்கு 3 சதவிகித வட்டி அளிக்கப்படுகிறது. வணிகர்களுக்கு தனியாக நடப்புகணக்கு வசதியுள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, கீழ்க்கண்டசேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதன் மூலம் ரொக்கம் – குறைவான பொருளாதாரத்திற்கு வழிவகுக்கிறது:

· ஆன்லைனில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் வசதி (மின்சாரம், தொலைபேசி, டி.டி.எச் மற்றும் பிற கட்டணங்கள்)

· QR குறியீடு, UPI வாயிலாக வணிக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி.

· இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து நாட்டின் எந்தவொரு வங்கிக்கும் பணபரிமாற்றம் (NEFT, RTGS, IMPS, தபால்காரர் துணையுடன் UPI) செய்யும் வசதி.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அஞ்சலகத்திலேயே ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் (AePS) வாயிலாக எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும், தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம், இருப்பு விசாரணை மற்றும் சிற்றறிக்கை போன்ற அடிப்படை வங்கி சேவைகளைப் பெறலாம்.

ஆதார் எண் இணைக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது அடையாளத்தினை விரல்ரேகை மற்றும் ஆதார் மூலமாக வங்கி சேவையைப் பெறலாம். ஆதார் மூலமான பரிவர்த்தனை (AePS) மலிவான கட்டமைப்பில் வழங்கப்படும் வங்கி சார்பற்ற சேவைகள் ஆகும். இதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் எவ்வித தங்குதடையுமின்றி அவர்களது வீட்டுவாசலுக்கே வங்கி சேவையினை அளிக்கும் புதிய நிதிசார் சேவைகள் உதயமாகியுள்ளன.

பணம் எடுக்க, தொலைவில் உள்ள வங்கிக் கிளையையோ அல்லது ஏடிஎம் இயந்திரத்தையோ தேடும் அலைச்சலின்றி, தங்கள் ஊரில் உள்ள அஞ்சலகதிலேயே தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து பணம்பெறுதல், பிற வங்கிக் கணக்குகளுக்குப் பணப்பரிமாற்றம், இருப்பு விசாரணை மற்றும் சிற்றறிக்கை போன்ற அடிப்படை வங்கி சேவைகளை தபால் நிலைய கவுன்டர்/ தபால்காரர் / கிராமிய அஞ்சல்காரர் மூலம் பெறலாம்.

இந்நிலையில் மத்திய அரசு கொரோனா நோய்த் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடிங்கினால் பாதிக்கப்பட்டசுமார் 80 கோடி மக்களுக்கு உதவும் வண்ணம் 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் மற்றும் உதவித்தொகையினை நேரடி மானிய பரிமாற்றமாக 3 மாதங்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளது.

இந்த உதவித்தொகையினை பெறும் பயனாளிகள், ஆதார் மூலமான பணபரிவர்த்தனைகள்(AePS) வாயிலாக, உயர்த்தப்பட்ட ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் (NREGA), சமூகப் பாதுகாப்பு நலத்திட்ட உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவித்தொகைகளை ஆதார் எண்ணைக் கொண்டு எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகத்திலேயே சுலபமாக பெறமுடியும்.

வாடிக்கையாளர் தபால் நிலையத்தையோ அல்லது தபால்காரரையோ அணுகி ஆதார் எண் இணைக்கப்பட்ட எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் எடுக்கலாம். இதற்கு IPPB யில் கணக்கு இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை.

தங்கள் செல்பேசியில் வந்த OTP மற்றும் உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி எளிதாக பணம் எடுக்கலாம்.

AePS– வாடிக்கையாளர்களுக்கு நன்மைகள்:

Ø AEPS பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பான கட்டண தளம்.

Ø அருகிலுள்ள வங்கி கிளைகள் / ஏடிஎம்கள் கிடைக்காத பிற வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகளை அணுகும் திறன்.

Ø AEPS ஒரு நபரின் புள்ளிவிவர மற்றும் பயோமெட்ரிக் / கருவிழி தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, இது எந்த மோசடி மற்றும் உண்மையல்லாத செயல்பாட்டின் அச்சுறுத்தலை நீக்குகிறது.

Ø பிற வங்கி வாடிக்கையாளர்கள் குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஐபிபிபி அல்லாத கணக்கிலிருந்து தங்கள் வீட்டிலிருந்தே தபால்காரர்கள் மூலமாக வங்கி சேவையைப் பெற முடியும்.

Ø தொலைதூர வங்கிக் கிளைகளில் உள்ள செயல்படாத வங்கி கணக்குகளில் தடுக்கப்பட்ட DBT வரவு உள்ளிட்ட நிதிகளை அணுகும் திறன்.

Ø AEPS மூலம் வங்கிகளுக்கு பயணம் செய்யும் நேரம் மற்றும் பயண செலவு இல்லை.

இந்தத் தகவலை தமிழ்நாடு அஞ்சல் வட்டார தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


தவறவிடாதீர்!

India postகரோனாஏடிஎம் தேவையில்லைஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் பணம் பெறும் வசதிதபால் நிலையங்களில் அறிமுகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author