Published : 31 Aug 2015 09:59 AM
Last Updated : 31 Aug 2015 09:59 AM

மோட்டார் வாகன சட்டத்தை முறைப்படுத்த வேண்டும்: ‘தி இந்து’ பிசினஸ்லைன் கலந்துரையாடல்- லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் வலியுறுத்தல்

“ஒவ்வொரு மாநிலத்திலும், மோட் டார் வாகனத்துக்கு ஒவ்வொரு சட்டம் உள்ளது. அதை முறைப் படுத்த வேண்டும்” என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்ல தம்பி வலியுறுத்தினார்.

நாமக்கல் ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் ‘தி இந்து’ ‘பிசினஸ் லைன்’ சார்பில் மோட்டார் வாகன உரிமை யாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்ல தம்பி பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கு முது கெலும்பாக சரக்கு வாகனப் போக்குவரத்து உள்ளது. இந்தி யாவில் தென் மாநிலங்களில் மோட்டார் வாகனப் போக்குவரத்து நல்ல நிலையில் உள்ளது. வட இந்தியாவில் அதுபோன்ற சூழல் இல்லை. பல மாநிலங்களில் வழிப்பறியும், ஓட்டுநர்கள் தாக்கப்பட்டு பொருட்கள் கொள் ளையடிக்கப்படும் சம்பவங் களும் நடக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும், மோட்டார் வாகனத்துக்கு ஒவ் வொரு சட்டம் உள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இருந்து டெல்லி வரை சரக்கு வாகனம் செல்ல சுங்கக் கட்டணம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், காவல்துறையினர் என ரூ.20 ஆயிரம் வரை தனியாக செலவு செய்ய வேண்டி உள்ளது. பிற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும், இதேநிலை தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சம்மேளனப் பொருளாளர் சென்னகேசவன் பேசியதாவது:

இந்தியாவில் சரக்கு வாகன ஓட்டுநர் தினசரி 250 கி.மீ., தூரம் மட்டும் தான் வாகனம் ஓட்ட முடிகிறது. வெளிநாடுகளில் 500 முதல் 600 கி.மீ., தூரம் வரை வாகனங்ளை ஓட்டிச் செல்கின்றனர். இப்பிரச்சினைக்கு காரணம் சுங்கச்சாவடி மற்றும் செக்போஸ்ட் தான். கொல்கத்தா வைச் சேர்ந்த ஐஐஎம் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் சுங்கச்சாவடி, செக் போஸ்ட் மூலம் காலவிரயம் மற்றும் டீசல் இழப்பு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.87 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒரேமுறை சுங்கக் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அசோக் லைலேண்ட் நிறுவன அபிவிருத்திப் பிரிவு முதுநிலை துணைத்தலைவர் டாக்டர் என்.சரவணன், அசோக் லைலேண்ட் நிறுவன வாகனங்களின் அம்சங் கள், புதிய தயாரிப்புகள் குறித்து விளக்கினார். மேலும், வாகன உரிமையாளர்களின் கேள்விக்கு விளக்கமளித்ததோடு, அவர்கள் சுட்டிக்காட்டிய குறை களை நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு மாவட் டங்களில் இருந்து வந்திருந்த லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி கள், லாரி உரிமையாளர்கள், சரக்கு வாகனப் போக்கு வரத்து தொழிலில் நிலவும் சவால் கள், எதிர்நோக்கும் பிரச் சினை, அதற்கான தீர்வுகள் என்ன என்பது குறித்து பேசினர்.

முன்னதாக பிசினஸ் லைன் மும்பை பிரிவு முதுநிலை மண்டல துணை மேலாளர் ராகுல் குன்சர்க்கார் வரவேற்றார். சென்னை பிசினஸ் லைன் மீரா சிவா, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவன அதிகாரி கர்ணன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். ‘தி இந்து’ தமிழ் ஆன் லைன் பிரிவு ஆசிரியர் பாரதி தமிழன் நன்றி கூறினார்.

‘தி இந்து பிசினஸ்லைன்’ சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற மோட்டார் வாகன உரிமையாளர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் அசோக் லைலேண்ட் அபிவிருத்திப் பிரிவு முதுநிலை துணைத்தலைவர் டாக்டர் என்.சரவணன் பேசினார். அடுத்த படம்: கூட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x