

மத்திய அரசு ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு (எஸ்.இ.இசட்) அனுமதி வழங்கி இருக்கிறது. இதில் 4 நிறுவனங்கள் ஐடி மற்றும் ஐடிஇஎஸ் பிரிவை சேர்ந்தவை ஆகும்.
ஹெச்சிஎல் ஐடி சிட்டி லக்னோ மற்றும் லோமா ஐடி பார்க் டெவலப்பர் (மும்பை) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, எம்மார் எம்ஜிஎப், ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்மார் எம்ஜிஎப் நிறுவனத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான செயல்பாடுகளும் தொடங்கப்படவில்லை. தவிர கால நீட்டிப்பு குறித்தும் விண்ணப்பிக்கவில்லை என்பதால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தவிர 22 நிறுவனங்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டிருக்கின்றன.
இதில் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் தமிழ்நாடு, நவிமும்பை எஸ்.இ.இசட் ஆகியவை அடங்கும். இதுவரை 416 எஸ்.இ.இசட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.