

முன்னணி மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனமான தைவானில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஜியோமி மொபைல் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக ஜியோமி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் வளரும் இந்திய செல்போன் சந்தையை ஜியோமி நிறுவனம் பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்தியாவிலேயே ஆலையை தொடங்க உள்ளதாக கூறியுள்ளது.
ஜியோமி நிறுவனம் சென்ற ஆண்டு முதல் இந்திய சந்தையில் செயல்பட்டு வருகிறது, சீனா மற்றும் பிரேசிலில் உற்பத்தி செய்து வருகிறது.
தற்போது ஸ்ரீ சிட்டியில் அசெம்பிள் யூனிட் உள்ளது. இந்த யூனிட்டிலிருந்து ரெட்மி 2 பிரைம் மாடலை அசெம்பிள் செய்கிறது. படிப்படியாக வெவ் வேறு மாடல்களையும் தயாரிக் கத் திட்டம் வைத்துள்ளது.
நிறுவனத்தின் இரண்டாவது உற்பத்தி ஆலை சீனாவுக்கு வெளியே பிரேசிலில் நாட்டில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் சேர்ந்து அமைத்துள்ளது.
நாங்கள் அரசாங்கத்துடன் பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் ஆலை அமைக்க பேச்சு நடத்தி வருகிறோம். ஏற்ெகனவே உற்பத்திய தொடங்கி விட்டோம் என்று ஜியோமி நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹியூகோ பாரா செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் பாக்ஸ்கான் நிறுவனம் மஹாராஷ்டிராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது.
ஜியோமி நிறுவனம் விசாகப்பட்டினத்தில் உற்பத்தில் ஆலை அமைக்க உள்ளது. இங்கிருந்து ரெட்மி 2 பிரைம் மாடலை தயாரிக்க உள்ளது.
இந்த மாடலை பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் மற்றும் எம்ஐ டாட் காம் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வழி விற்பனை செய்யப்படும் என பாரா மேலும் குறிப்பிட்டார்.
நிறுவனம் இந்தியாவில் இதுவரை 30 லட்சம் செல்போன் களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை யிலான ஐந்து மாதத்தில் பத்து லட்சம் செல்போன்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.