

கார்ப்பரேஷன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 12 சதவீதம் சரிந்து 204 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 231 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் இருந்தது.
ஆனால் வங்கியின் மொத்த வருமானம் 2.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 5,215 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,334 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
வாராக்கடனுக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்திருந்ததால் நிகர லாபம் சரிந்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் 458 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இப்போது 621 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 5.43 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.55 சதவீதமாகவும் இருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.75 சதவீதம் உயர்ந்து 54.05 ரூபாயில் முடிவடைந்தது.