வணிகம்
ஐஓசி பங்கு விலக்கல்: ரூ. 9,300 கோடி திரட்டல்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 10 சதவீத பங்கு விலக்கல் திட்டமிட்டபடி நேற்று நடந்தது. இந்த பங்கு விலக்கல் மூலம் ரூ.9, 379 கோடி திரட்டப் பட்டதாக பங்கு விலக்கல் துறை செயலர் ஆராதனா ஜோஹ்ரி கூறினார்.
28.74 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான விற்பனை விலை ரூ. 387 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 24.28 கோடி பங்குகள் விற்பனை மூலம் ரூ.9,300 கோடி திரட்டப் பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப் பட்டது. நிறுவன முதலீட்டாளர்களி டையே ஐஓசி பங்குகளை வாங்க போட்டி நிலவியது. 19.42 கோடி பங்குகள் இவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சில்லரை வர்த்தக முதலீட்டா ளர்களிடமிருந்து 88.88 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 4.85 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
