எஸ்பிஐ-யின் செல்போன் செயலி ‘படி’ அறிமுகம்

எஸ்பிஐ-யின் செல்போன் செயலி ‘படி’ அறிமுகம்
Updated on
1 min read

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ நேற்று செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது, எஸ்பிஐ -படி என்கின்ற இந்த செயலி அசெஞ்சர் மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலமான சேவை பழைய வாடிக்கையாளர்கள் மற்றும் எஸ்பிஐ வாடிக்கை யாளர்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும் என்றும் வங்கி குறிப் பிட்டுள்ளது. ‘இந்த செயலியை நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த சின்ஹா, நிதித்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிதி மற்றும் நிதி சாராத வாடிக்கையாளர்களின் தினசரி வங்கி நடவடிக்கைகளை நிறை வேற்றுவதற்கான இலக்கின் மற்று மொரு அடுத்த கட்ட நடவடிக்கை என்றும், செல்போன்கள் மூலம் தகவல் பரிமாற்றம் மற்றும் செயலி மூலம் எங்களது செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு உடனுக் குடன் கொண்டு சேர்க்க முடியும் என்றும் எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறினார்.

இந்த செல்போன் செயலி மூலம் புதிய மற்றும் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் திரைப் படங்கள், விமான பயணச் சீட்டு, ஓட்டல்கள் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றுக்கான கட்டணங் களை செலுத்தலாம்.

இந்த செயலி மூலம் நிலுவை கட்டணங்கள், ரீசார்ஜ் மற்றும் செலுத்த வேண்டிய கட்டணங் களை உடனடியாக செலுத்த முடியும். இந்த நிகழ்ச்சியில், நிறுவனங் களின் சமூக பொறுப்புணர்வு செயல்பாடுகளை மேம்படுத்து வதற்கு ஏற்ப எஸ்பிஐ பவுண்டேஷன் என்கிற புதிய அமைப்பும் தொடங்கி வைக்கப்பட்டது. நிதி யமைச்சர் அருண் ஜேட்லி இந்த புதிய அமைப்பின் லோகோ மற்றும் இணையதளத்தை திறந்து வைத்தார்.

இந்த அமைப்பு எஸ்பிஐ வங்கியின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள், சுற்றுச்சூழல், பெண்கள் மேம் பாடு, குழந்தைகள் நலன் உள்ளிட்ட சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளை நிர்வகிக்கும் அமைப்பாக செயல்பட உள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in