

பிரிட்டானியா நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 66 சதவீதம் உயர்ந்து 189 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 113 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனை 13 சதவீதம் உயர்ந்து 2,002 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர விற்பனை 1,772 கோடி ரூபாயாக இருந்தது. எப்எம்சிஜி துறை மந்தமாக இருந்த நிலை யிலும் கூட நாங்கள் சிறப்பாக செயல் பட்டிருக்கிறோம் என்று நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் வருண் பேரி தெரிவித்தார்.
இந்த காலாண்டில் செல வுகள் 6 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் ஜூன் காலாண்டில் 1,649 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இப்போது 1,757 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1.24 சதவீதம் உயர்ந்து 3,175 ரூபாயாக இருந்தது.