Published : 27 Mar 2020 04:47 PM
Last Updated : 27 Mar 2020 04:47 PM

வீடு உள்ளிட்ட கடன்களுக்கு 3 மாத இஎம்ஐ அவகாசம்; - யார் யாருக்கு பொருந்தும்; எந்த கடன்களுக்கு இல்லை? - முழுமையான தகவல்கள்

கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கவேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள நிலையில், இது யார் யாருக்கு இது பொருந்தும், எந்த கடன்களுக்கு இல்லை என்ற முழுமையான தகவல்கள் வெளி வந்துள்ளன.

கரோனா வைரஸால் 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி வீதத்தை 5.15 சதவீதத்தில் இருந்து 75 புள்ளிகள் குறைத்து 4.4 சதவீதமாக வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது.

அதுமட்டுமல்லாமல் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்த கடனுக்கான மாத்த தவணையை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம்.

அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாசக் காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் சேர்த்துவிடக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் யார் யாருக்கு இது பொருந்தும், எந்த கடன்களுக்கு இல்லை என்ற முழுமையான தகவல்கள் வெளி வந்துள்ளன.
இந்த அறிவிப்பு குறித்த முக்கிய தகவல்கள்:

* பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.

* ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி வீட்டுக்கடன், தனிநபர்க் கடன், கல்விக்கடன், வாகனக் கடன் என கால நிர்ணயம் கொண்ட அத்தனைக் கடன்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

* கூடுதலாக மொபைல், வீட்டு உபயோகப் பொருட்களுக்காக வாங்கிய கடன்களுக்கும் இந்த இஎம்ஐ நிறுத்த உத்தரவு பொருந்தும்.

* டேர்ம் லோன் என்பபடும் கிரெடிட் கார்டு கடன்களுக்கு இது பொருந்தாது. எனவே கிரெடிட் கார்டு கடன்களுக்கு தொடர்ந்து இஎம்ஐ செலுத்த வேண்டும்.

* ப்ராஜெக்ட் லோன் என்பது தொழிற்சாலை கட்டுவதற்கோ, வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்காகவோ வாங்கப்படும் கடன். அத்தனை டேர்ம் லோன்களுக்கும் இஎம்ஐ நிறுத்தம் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் விதி.

* வரும் 3 மாதங்கள் மட்டுமே இ.எம்.ஐ செலுத்த வேண்டாம். அதற்கு அடுத்து, வழக்கம் போல, ஒரு மாதத்திற்கான தொகையை ஒவ்வொரு மாதமும், கடன் தவணை காலம் முடியும் வரை செலுத்த வேண்டும்.

* 3 மாதங்களுக்கு பிறகு மொத்தமாக மூன்று மாத தவணைத் தொகையும் செலுத்த வேண்டிய தேவையில்லை.

* கடனை செலுத்த கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே, 3 மாதங்கள் கழித்து அதே கடன் தொகையை செலுத்த வேண்டும்.

* கடன் தொகையை 3 மாதங்கள் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கையோ, CIBIL மதிப்பெண்ணை குறைக்கும் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

* ஒவ்வொரு வங்கியும் தத்தமது நிர்வாகக் குழுவுடன் இணைந்து ஆலோசித்து ரிசர்வ் வங்கியின் உத்தரவை நடைமுறைப்படுத்தும்.

* அந்தந்த வங்கியின் போர்டு கவுன்சில் அனுமதி அளித்த பின்னர்தான் வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் இஎம்ஐ தற்காலிக நிறுத்திவைப்பு குறித்துத் அறிவிப்பை நடைமுறைப்படுத்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x