

கரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் ஏழைத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்துள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. யாரும் பசியுடன் இருக்கக் கூடாது. எனவே வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதித் திட்டம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் இலவச அரிசி, பருப்பு, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிதி, விவசாயிகளுக்கு நிதியுதவி என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில் முக்கிய தகவல்கள்:
* 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும்.
* இந்த திட்டத்தின் மூலம், உணவில்லாமல் யாரும் பாதிக்கப்படாத நிலை ஏற்படும்.இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்
100 நாள் வேலை திட்டம்
* 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.
* யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், அதில் முதல் தவணையாக 2000 ரூபாய் உடடினயாக வழங்கப்படும்.
* இதன்மூலம் 8.69 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தொகை வழங்கப்படும்.
* முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்.
ஓய்வூதியம்
* விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்.
* விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும். 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்.
மருத்துவக் காப்பீடு
* சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு செய்யப்படும்.
* மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்படும்.