கடனை செலுத்த 1 ஆண்டு வரை விலக்கு: தொழில் கூட்டமைப்பு அசோசேம் கோரிக்கை

கடனை செலுத்த 1 ஆண்டு வரை விலக்கு: தொழில் கூட்டமைப்பு அசோசேம் கோரிக்கை
Updated on
1 min read

கரோனா வைரஸ் தீவிரத்தால் வர்த்தகதொழில்துறை முடங்கியுள்ளது. இதனால்,வங்கிகள் அனைத்து வகை கடன்களுக்கும் திருப்பிச் செலுத்துவதற்கு 1 ஆண்டு வரை விலக்கு அளிக்க வேண்டும் என்று தொழில் கூட்டமைப்பு அசோசேம் கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா பாதிப்பு தொடர்பாக உருவாக்கப்பட உள்ள பணிக்குழுவின் தலைவரான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த வேண்டுகோளை அவ்வமைப்பு முன்வைத்துள்ளது. கரோனா வைரஸால் நாடுமுழுவதும் தொழில் மற்றும் வர்த்தக செயல்பாடு முடங்கியுள்ளது. இந்தச் சூழலில் நிதி நிறுவனங்களிடம் பணப் புழக்கத்தை ஏற்படுத்துவது அவசியம். அந்த வகையில் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு எல்ஐசி மூலமாக நிதி வழங்க வேண்டும். தவிர, வாராக் கடன் தொடர்பான வரையறையை மாற்றிஅமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுபோன்ற பெரும் நெருக்கடி நிலைக்கு தயாராவது மிகக் கடினமான ஒன்று. துரதிருஷ்டமாக, இந்தியா ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் கரோனா பாதிப்பு பொருளாதார நிலையை மேலும் சரிவுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in