Published : 22 Mar 2020 09:56 AM
Last Updated : 22 Mar 2020 09:56 AM

கரோனா வைரஸால் தொழில் பாதிப்பைச் சந்தித்த சிறு குறு நிறுவனங்களுக்கு சிறப்புக் கடன்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

கரோனா வைரஸால் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், சிறு குறு நடுத்தர நிறுவனங்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் எஸ்பிஐ சிறப்பு கடன்திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கரோனாவால் தொழில் பாதிப்பைச் சந்தித்தவர்களுக்கு 7.25 சதவீத வட்டியில் சிறப்புக் கடன்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஜூன் 30 வரை இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகபட்சமாக நிறுவனத்தின் மூலதன மதிப்பில் 10 சதவீதம் அளவில் கடன்கள் வழங்கப்படும். அதிகபட்ச கடன் தொகை ரூ.200 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடன் தொகை உடனேவழங்கப்படும். கடன் வாங்குபவர்கள் ஆறு மாதம் கழித்து தவணை முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். கரோனா பாதிப்பால் நிதிச் சூழற்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழில்நிறுவனங்களில் நிதிப் புழக்கத்தை உண்டுபண்ணும் வகையில் எஸ்பிஐ கொண்டுவந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை வேகமாகக் கட்டுப்படுத்தினாலும், பொருளாதார நிலை சீரடைய இன்னும் 9 மாதங்கள் ஆகும் என்றுகூறப்படுகிறது. கரோனா வைரஸ் தீவிரத்தால் தொழில்துறை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. வரும் நிதி ஆண்டில்இந்தியாவில் முதலீடுகள் மற்றும்ஏற்றுமதி குறையும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x