

கோவிட்-19 வைரஸ் தாக்குதல் காரணமாக ஆட்டோமொபைல் துறை கடுமையான தேக்க நிலையை சந்தித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கார் விற்பனையை அதிகரிக்க 7 ஆண்டுகளுக்கு வட்டியில்லா சுலபதவணை திட்டத்தை அறிவித்துள்ளது.
அத்துடன் முதல் தவணை தொகையை 120 நாள்களுக்குப் பிறக (4 மாதங்கள்) செலுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது. இதன்மூலம் செவர்லே, பியூக், கெடிலாக் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதேபோல மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு தவணையை செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.
வீடுகளிலிருந்தே பணிபுரியுமாறு தனது ஊழியர்களுக்கு இந்நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. அலுவலகத்துக்கு வராமல் வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் சாத்தியம் உள்ள பணியாளர்கள் அலுவலகம் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதேபோல பியட் கிரைஸ்லர் நிறுவனமும் தனது ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது.