Published : 07 Aug 2015 10:36 AM
Last Updated : 07 Aug 2015 10:36 AM

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம்: முதன்மை செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜூ தகவல்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் இந்தியா வில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை முதன்மை செய லாளர் ஜக்மோகன் சிங் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கம் (துடிசியா) சார்பில் 4 நாள் தொழில் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜக்மோகன் சிங் ராஜூ பேசும்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட் டுக்கு தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை, சலுகைகளை அறிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சியில் இந்தி யாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத் துவற்காக இன்று மாலை 4 மணியளவில் அமைச்சர் முன்னிலையில் 4 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் படவுள்ளது.

அதுபோல இ- காமர்ஸ் திட்டம் தொடர்பாக 3 நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப் படுகிறது என்றார்.

மாவட்ட ஆட்சியர் ம. ரவிக் குமார் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் துறை மேம்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

மாவட்ட சிறுதொழில் சங்கம் கண்காட்சி நடத்த 10 ஏக்கர் நிலம் வழங்குமாறு கேட்டனர். அவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இந்த பகுதியிலேயே வழங்க தேர்வு செய்துள்ளோம். சென்னைக்கு அடுத்தப் படியாக விமானம், ரயில், கப்பல், சாலை என நான்கு வகையான போக்குவரத்து வசதி யும் தூத்துக்குடியில் அமைந் துள்ளது. தமிழக அரசின் 2023 தொலைநோக்கு திட்டத்தில் சென்னை- தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி முதல் பெரியதாழை வரை கிழக்கு கடற்கரை சாலை அமைக்க ரூ. 46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்படுகிறது. தூத்துக்குடி- மணியாச்சி இடையே 28 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க ரூ. 140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 589 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. தமிழக அரசே இந்த நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையங்கள் ஆணையத்திடம் வழங்கும்.

ஆலந்தலையில் ரூ.680 கோடியில் 60 எம்எல்டி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. அதுபோல ராமநாதபுரம் குதிரைமொழியில் 60 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதில் கிடைக்கும் குடிநீரில் 70 சதவீதம் தூத்துக்குடி மாவட்டத்துக்கே கிடைக்கும். தூத்துக்குடி மாந கராட்சி சார்பில் ரூ. 19 கோடியில் கழிவு நீரை குடிநீராக்கும் திட்டம், சிப்காட் சார்பில் தனியாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவையும் நிறைவேற்றப் படவுள்ளது.

குறு, சிறு, நடுத்தர தொழில் தொடங்குவோர் கடலோர ஒழுங்கு முறை பகுதியை தவிர்த்து, 500 மீட்டருக்கு அப்பால் தொழில் தொடங்க முன்வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x