

கோவிட் 19 பாதிப்பு காரணமாக சர்வதேச சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துவரும் நிலையில், யெஸ்வங்கியின் விவகாரமும் தலைதூக்கியதால் இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவைக் கண்டன.
கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை 1.88 சதவீதம் அதாவது 720.67 புள்ளிகள் சரிந்தது. வெள்ளிக்கிழமை மட்டுமே யெஸ் வங்கி விவகாரத்தினால் 894 புள்ளிகள் சரிந்தது.
பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டதன் எதிரொலியாக சந்தை மதிப்பில் முதல் பத்து இடங்களில் உள்ள நிறுவனங்கள் ரூ.95,432 கோடி இழப்பைச் சந்தித்தன.
அதிகபட்ச இழப்பு
இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்சமாக ரூ.37,144 கோடி இழப்பைச் சந்தித்தது.
இதனால் இதன் சந்தை மதிப்பு ரூ.8,05,118.67 கோடியாகக் குறைந்தது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பு ரூ.23,435 கோடி குறைந்து ரூ.6,22,109.94 கோடியாக உள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, பார்தி ஏர்டெல் ஆகியவையும் கணிசமாக இழப்பைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா பேங்க் ஆகியவை சந்தை மதிப்பில் சிறிது ஏற்றம் கண்டுள்ளன.