பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திலும் தன் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு: ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திலும் தன் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு: ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அழைப்பு
Updated on
1 min read

தாராளமய பொருளாதாரக் கொள்கையின் அங்கமாக பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை அரசு விற்கும் முடிவுகளை விரைவு கதியில் நடத்தி வருகிறது, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள தனது 52.98% பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்பந்தப்புள்ளிகளை சனிக்கிழமையன்று கோரியுள்ளது.

“மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உள்ள தனது 114.91 கோடி பங்குகளை, அதாவது 52.98% பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது இதோடு நிறுவனத்தின் மீதான தங்களது கட்டுப்பாடுகளையும் பங்குகளை வாங்குவோருக்கு மாற்றும் முடிவை மேற்கொண்டுள்ளது. ஆனால் பிபிசிஎல் நிறுவனம் நுமாலிகார் சுத்திகரிப்பு நிறுவனத்தில் கொண்டுள்ள 61.65% பங்குகள் நிலவரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசு முதலீட்டை வாபஸ் பெறும் நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ள மத்திய அரசு டெலாய்ட் டச்சி தோமாட்சு இந்தியா எல்.எல்.பி. என்ற நிறுவனத்தை பரிவர்த்தனை ஆலோசகராக நியமித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in