

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தனியார் வங்கியான `எஸ் பேங்க்' ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானதையடுத்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
இது தொடர்பாக இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம், அதில் எங்கள் முடிவு குறித்து கூறியிருக்கிறோம். இப்போது தீர்வு வெகுவிரைவில் மேற்கொள்ளப்படும்.
30 நாட்கள் என்பது வெறும் புற வரம்புதான். அதற்குள்ளேயே தீர்வு காணப்படும். இந்தியாவில் வங்கிகள் அமைப்பு பாதுகாப்பாகவும் திடகாத்திரமாகவும் உள்ளது. எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.
ஆர்பிஐ வங்கி இயக்குநர்கள் போர்டைக் கலைத்துள்ளது. அதற்குப் பதிலாக நிர்வாகியை நியமித்துள்ளது.