பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி- ரிசர்வ் வங்கியின் தடையை ரத்து செய்து உத்தரவு

பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸி வர்த்தகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி- ரிசர்வ் வங்கியின் தடையை ரத்து செய்து உத்தரவு
Updated on
1 min read

நீண்டகாலமாகக் குழப்பத்தில் நீடித்துவந்த, தடை செய்யப்பட்ட கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கிரிப்டோகரன்ஸி மீதான ரிசர்வ் வங்கியின் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆர்பிஐ-யின் தடையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை நேற்று வழங்கியது. இந்நிலையில் கிரிப்டோகரன்ஸிகளின் பயன்பாடு சட்டபூர்வமாகியுள்ளது.

‘மெய் நிகர் நாணயம்’ எனப்படும் டிஜிட்டல் கரன்ஸி அல்லது கிரிப்டோகரன்ஸி என்பது ரிசர்வ்வங்கியின் கட்டுப்பாட்டில் வராததனித்த பரிவர்த்தனை முறையாகும். பிட்காயின் இவ்வகை கிரிப்டோகரன்ஸியில் முதன்மையானது. ஒரு நாட்டின் நாணய மதிப்புக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இவைதனித்த பண மதிப்பைக் கொண்டிருக்கும்.

கிரிப்டோகரன்ஸி முறையினால் வரி மோசடி அதிகம் நிகழும் என்றும்முறைப்படுத்தப்படாத இந்தப் பரிவர்த்தனைகள் பெரும் பாதிப்பைஏற்படுத்தும் என்றும் ஆர்பிஐ கடந்தசில ஆண்டுகளாக எச்சரித்து வந்தது. அதைத் தொடர்ந்து 2018-ல்கிரிப்டோகரன்ஸி தொடர்பான பயன்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. வங்கிகள்,நிதி நிறுவனங்கள் இதுதொடர்பாக எந்தச் சேவைகளும் வழங்கக் கூடாது என்று தடைவிதித்தது. அதைத் தொடர்ந்து கிரிப்டோகரன்ஸி சார்ந்து செயல்பட்டு வந்த நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கியின் உத்தரவை எதிர்த்து இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐஎம்ஏஐ) மனுதாக்கல் செய்தது. அம்மனு நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன், அனிருத்தா போஸ் மற்றும் வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அம்மனுவை விசாரத்த நீதிபதிகள் கிரிப்டோகரன்ஸி பயன்பாட்டுக்கு இருந்த தடையை ரத்து செய்து அனுமதி அளித்தனர்.

கிரிப்டோகரன்சி என்பது பணம் அல்ல. அது ஒருவகைப் பொருள். அதை தடை செய்வதற்கு ஆர்பிஐக்கு அதிகாரம் இல்லை என்றுஐஎம்ஏஐ தனது வாதத்தை முன்வைத்தது. உலக நாடுகள் பலவும் கிரிப்டோகரன்ஸி தொடர்பாகக் கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்நிலையில் கடந்த2017-ம் ஆண்டு ஜப்பான் கிரிப்டோகரன்ஸியை சட்டபூர்வமாக்கியது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கிரிப்டோகரன்ஸி தொடர்பாக உருவாக்கப்பட்ட மத்திய அரசின் குழு, கிரிப்டோகரன்ஸி பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்வது அவசியம் என்று கூறி, அப்பரிவர்த்தனையில் ஈடுபடுபவர்கள், அது சார்ந்து இயங்குபவர்கள் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனைவிதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in