

ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை களை மேலும் எளிதாக்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறி முகப்படுத்த உள்ளது.
இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகமும், தொழில் அமைச்சகமும் நிதி அமைச்சகத்தின் ஒத்துழைப் போடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஏற்றுமதி வர்த்த கத்தில் ஈடுபட்டுள்ள வர்த்த கர்கள் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு அலைய வேண்டியுள்ளது. ஒற்றைச் சாளர முறை அமலுக்கு வந்தால், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் தங்களது அனைத்து அனுமதி யையும் ஒரே சமயத்தில் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் பெற்று விட முடியும். மொத்தம் 10 துறைகளை இதில் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய நடைமுறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் புரிவதற்கும், ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்குப் பயனுள்ளதாக இது இருக்கும் என்று இந்திய ஏற்றுமதி யாளர்கள் சம்மேளனத்தின் (எப்ஐஇஓ) இயக்குநர் ஜெனரல் அஜய் சஹாய் தெரிவித் துள்ளார்.
தொடர்ந்து 7 மாதங் களாக நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதத்தில் 15.82 சதவீதம் சரிந்து 2,228 கோடி டாலராக இருந்தது. சர்வதேச அளவில் நிலவும் தேக்க நிலை பொருளாதாரம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியன ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணங்களாக கூறப்பட்டுள்ளன.