Published : 03 Mar 2020 09:49 AM
Last Updated : 03 Mar 2020 09:49 AM

தமிழருக்கு ‘இஸ்லாமிகா 500’ இதழ் விருது

இஸ்லாமியப் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த முஹம்மது ஜின்னாவுக்கு, ‘இஸ்லாமிகா 500’ இதழ் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவர் தமிழர் ஆவார்.

யுனைடெட் வேர்ல்டு ஹலால்டெவலப் மென்ட் (UNWHD) என்றநிறுவனத்தின் தலைவராக இருந்துவரும் முஹம்மது ஜின்னா, இஸ்லாமிய பொருளாதாரத்துக்காகப் பெரும் பங்காற்றிவருகிறார். ஆண்டுதோறும் நவம்பர்1-ம் தேதியை உலக ஹலால் தினமாக அறிவித்து, அன்றைய தினத்தில் சர்வதேச அளவிலானவர்த்தகக் கண்காட்சியை பல்வேறுநாடுகளில் நடத்தியிருக்கிறார்.

இந்த வர்த்தக கண்காட்சி, இஸ்லாமிய வங்கி, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலாஆகியவற்றை பல்வேறு நாடுகளுக்கு மத்தியில் மேம்படுத்தும் முன்முயற்சியை எடுப்பதற்கும் – உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், முதலீட்டார்கள், நுகர்பொருள்நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுகள் ஆகியவைப் பொதுவான ஒரு தளத்தில் சந்தித்து தொழில் பரிமாற்றங்கள், ஒப்பந்தங்wகள், வர்த்தக சமூகங்களுக்கு மத்தியிலான நெட்வொர்க்கிங் முதலானவற்றுக்கு களம் அமைத்து தருகிறது. மேலும் முஹம்மது ஜின்னா சில நாடுகளுக்கு சுற்றுலாத் துறை ஆலோசகராகவும் இருக்கிறார். போஸ்னியாவின் அமைதி தூதுவராகவும் இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x