Published : 03 Mar 2020 09:47 AM
Last Updated : 03 Mar 2020 09:47 AM

போலி ஜிஎஸ்டி ரசீது தயாரித்து ரூ.436 கோடி மோசடி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தியது போன்று போலி ஆவணங்களைத் தாக்கல்செய்து ரூ.436 கோடி அளவுக்கு மோசடி செய்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மத்திய டெல்லி பகுதியைச் சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் 17 நிறுவனங்கள் போலியாக ஆவணங்களை தாக்கல் செய்து ஜிஎஸ்டி ரிட்டர்ன் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்நிறு வனங்கள் ரீஃபண்ட் கோரிய தொகைரூ.11.55 கோடியாகும்.

இந்த நிறுவனங்கள் எதுவும் சம்பந்தப்பட்ட முகவரியில் செயல்படவில்லை. ஹவாலா முறையில்வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்போடு இந்த மோசடி நடைபெற்றுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜிஎஸ்டி ரிட்டர்ன் படிவங்களைத் தாக்கல் செய்த 17 நிறுவனங்களும் வெறும் காகிதத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட பகுதியில் அத்தகைய நிறுவனங்களே செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் மூலமாக உள்ளீடு வரி (இன்புட் டாக்ஸ்) சலுகையைப் போலி ரசீதுகளைத் தாக்கல் செய்து பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிப் கான், ராஜீவ் சத்வால், அர்ஜுன் சர்மாஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரும் 17 நிறுவனங்களும் பொருட்களை உற்பத்தி செய்வது போன்று ஆவணங்களைத் தயார் செய்து அதற்கு செலுத்தியதாக இன்புட் டாக்ஸ் வரித் தொகை ரூ.436 கோடி வரை பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இம்மூவருமே உறவினர்களாவர்.

கடந்த ஒரு மாதமாக விசாரணையிலிருந்து இவர்கள் தப்பி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x