

பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பங் கள் தொடர்பான தயாரிப்புகள், சேவைகளை வழங்கிவரும் நிறுவனமான கேப்ஜெமினி, நடப்பு ஆண்டில் 30,000 இந்தியர்களை புதிதாக பணியில் அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. புதியவர்கள், மற்றும் பணி அனுபம் கொண்டவர்கள் என இரு வகைகளின் கீழ் ஆட்களை பணிக்கு எடுக்க உள்ளது.
கேப்ஜெமினி நிறுவனத்தில்40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,00,000-க்கும் மேல் ஊழியர்கள் உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் 1.15 லட்சம் பேர் இந்நிறுவனத்தின் ஊழியர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 25,000 முதல் 30,000 பேரை புதிதாகப் பணிக்கு எடுக்க உள்ளது.
இதுகுறித்து கேப்ஜெமினி நிறுவன இந்தியப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் யார்தி கூறுகையில், ‘இந்தியா கேப்ஜெமினி நிறுவனத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. அதன் மொத்த ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கூடுத லாக 30,000 இந்தியர்களை புதி தாக பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.
30 வயதுக்கு குறைவானவர்கள்
கேப்ஜெமினி நிறுவனத்தில் 65 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கு குறைவான இளைஞர்கள். இந்நிறுவனம் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான ஆலோசனை, தயாரிப்புகள், அவுட்சோர்சிங் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.