Published : 01 Mar 2020 05:40 PM
Last Updated : 01 Mar 2020 05:40 PM

சமையல் எரிவாயு விலை குறைப்பு

மானியமில்லாத சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 12-ம் தேதி உயர்ந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் ‘‘கச்சா எண்ணெய் விலை உயர்வால் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது, வரும் மாதங்களில் விலை குறையும்’’ என்றார்.

இந்தநிலையில் மானியமில்லாத சமையல் எரிவாயு விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (மார்ச்1) டெல்லியில் ரூ.805.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.839 ஆகவும், மும்பையில் ரூ.776.50 ஆகவும், சென்னையில் ரூ.826 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.55 வரை விலை குறைகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x