

பிளிப்கார்ட் நிறுவனம் மீதான திவால் நடவடிக்கை உத்தரவை தேசிய நிறுவன சட்ட மேல்முறை யீட்டு தீர்ப்பாயம் நேற்று ரத்து செய்தது. திவால் நடவடிக்கை தொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத் திடமிருந்து பெறப்பட்ட சொத்து களையும், ஆவணங்களையும் மீண்டும் அந்நிறுவனத்திடம் ஒப் படைக்க வேண்டும் என்று உத்தர விட்டு, திவால் நடவடிக்கையி லிருந்து பிளிப்கார்ட் நிறுவனத்தை என்சிஎல்ஏடி விடுவித்துள்ளது.
வர்த்தக ஒப்பந்தத்தை மீறி மோசடி செய்ததாக கிளவுட்வாக்கர் ஸ்டிரீமிங் டெக்னாலஜிஸ் நிறு வனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (என்சிஎல்டி) புகார் மனு அளித்தது. அதைத் தொடர்ந்து பிளிப்கார்ட்மீது திவால் நடவடிக்கை மேற்கொள்ள என்சிஎல்டி கடந்த ஆண்டு அக் டோபர் மாதம் உத்தரவு பிறப்பித் தது. இந்நிலையில் என்சிஎல்ஏடி அந்த உத்தரவை ரத்து செய்து உள்ளது.
கிளவுட்வாக்கர் ஸ்டிரீமிங் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும் பிளிப்கார்ட்டுக்கும் இடையே 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி, கிளவுட்வாக்கர் நிறு வனம் வெளிநாடுகளில் இருந்து எல்இடி டிவிகளை இறக்குமதி செய்து பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விநியோகம் செய்துவந்தது. ஆனால் சில மாதங்களிலேயே பிளிப்கார்ட் கிளவுட்வாக்கர் நிறு வனத்திடமிருந்து டிவிகளை வாங்கு வதை நிறுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இறக்கு மதி செய்த டிவிகள் முடங்கிய தாகவும் அதனால் நஷ்டம் ஏற் பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. அந்த வகையில் ஒப்பந்தத்தை மீறி பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.26.95 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியது.
கிளவுட்வாக்கர் நிறுவனத் தின் குற்றச்சாட்டை பிளிப்கார்ட் மறுத்தது. ஒப்பந்தத்தின்படி, ரூ.85.57 கோடி செலுத்திவிட்ட தாகவும், கிளவுட்வாக்கர் நிறுவனத் தில் கடன் பாக்கி எதுவும் கொண்டிருக்கவில்லை என்றும் பிளிப்கார்ட் கூறியது.
கிளவுட்வாக்கர் புகாரை எதிர்த்து பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் நீரஜ் ஜெயின் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த என்சிஎல்ஏடி, கிளவுட் வாக்கர் நிறுவனம் உரிய ஆவணங்களைச் சமர்பிக்கவில்லை என்று கூறி பிளிப்கார்ட் நிறுவனத்தை திவால் நடவடிக்கையிலிருந்து நேற்று விடுவித்தது.